“எனக்கு ஒரு கோரிக்கை இருக்கிறது.” என்னுடைய தோழி ஏப்ரல் ரகசியம் சொல்ல விரும்பும்பொழுது (அவளுடைய ரகசியங்கள் ஒன்றும் அவ்வளவு சுவாரசியமாக இருக்காது. உண்மையில் அவை ரகசியங்களே அல்ல) அவள் குனிவது போலவே, அது முன்னோக்கி குனிந்து இருந்தது. “ நான் இங்கு இருப்பதை வேறு யாருக்கும் நீ சொல்லவில்லை என்றால் உன்னுடைய கண்களை நான் சரி செய்து தர முடியும்.”
“இந்த ஊரை விட்டு ஓடி விடு.”
அது கண்களை இருமுறை சிமிட்டியது. “நானும் அதற்குத்தான் முயற்சி செய்து கொண்டிருக்கின்றேன்”
“நான் என்ன சொல்ல வர்றேன்னா, உன்னால அதைச் செய்ய முடியாது.”
“ஏன் முடியாது?”
“யாராலயும் என்னுடைய கண்களை சரி செய்ய முடியல. கண்ணாடி மட்டும் தான் போட முடியுது.”
“என்கிட்ட சில சக்திகள் இருக்கு. அதை நீ பார்க்கலாம். ஆனா…”
“… உன்ன பத்தி யார்கிட்டயும் நான் சொல்ல கூடாது.”
“ஆமாம். அதுதான் முக்கியமானது. அதுதான் அடிப்படையானது.”
“நீ என்ன குருடாக்கிடமாட்ட அப்படின்னு நான் எப்படி நம்புறது? வாக்குறுதிகளை அள்ளி வழங்கி, மொத்தமாக பொய் பேசி தொலைபேசி மூலமாக பொருட்களை விக்கிறவங்கள்ள ஒருத்தர்தானே நீ.”
அது மீண்டும் குரலை ஏற்றி, இறக்கி பேச ஆரம்பித்தது. “எனக்கு எந்த துன்பமும் செய்யாத ஒரு உயிரிடம் நான் அப்படி நடந்து கொள்ள மாட்டேன்.”
“அப்ப நான் உன்னை துன்புறுத்தினால், நீ என்னை குருடாக்கிடுவிடுவாய்.”
“அது தேவையை அறிந்து செய்வது.”
“இப்ப என் கண்களை நீ சரியாகி கொடுத்தால், பிறகு, நான் யாருகிட்டயும் உன்னப்பத்தி சொல்லலைன்னா , நீ எங்க நிலத்தை விட்டு போயிவிடுவாய்?”
“ஆமாம். அதுதான் மையப்புள்ளி.”