This site uses cookies.
Some of these cookies are essential to the operation of the site,
while others help to improve your experience by providing insights into how the site is being used.
For more information, please see the ProZ.com privacy policy.
Nov 19, 2021 (posted viaProZ.com): Doing evaluation of a project done by European Union, GIZ, British Council and the Government of Sri Lanka, meeting with people in Colombo and other areas....more, + 3 other entries »
SRI LANKAN linguist with a Diploma in Translation and Interpretation from University of Kelaniya
Account type
Freelancer and outsourcer, Verified member This translator helped to localize ProZ.com into Tamil
Data security
This person has a SecurePRO™ card. Because this person is not a ProZ.com Plus subscriber, to view his or her SecurePRO™ card you must be a ProZ.com Business member or Plus subscriber.
Open to considering volunteer work for registered non-profit organizations
Rates
English to Tamil - Rates: 0.08 - 0.20 USD per word / 60 - 150 USD per hour English to Sinhala (Sinhalese) - Rates: 0.10 - 0.25 USD per word / 60 - 150 USD per hour Tamil to English - Rates: 0.10 - 0.25 USD per word / 60 - 150 USD per hour Sinhala (Sinhalese) to English - Rates: 0.10 - 0.25 USD per word / 60 - 150 USD per hour English to Indonesian - Rates: 0.08 - 0.20 USD per word / 60 - 150 USD per hour
Arabic to Sinhala (Sinhalese) - Rates: 0.12 - 0.30 USD per word / 70 - 175 USD per hour English to Arabic - Rates: 0.06 - 0.18 USD per word / 60 - 150 USD per hour English to Chinese - Rates: 0.06 - 0.18 USD per word / 60 - 150 USD per hour English to Malay - Rates: 0.06 - 0.18 USD per word / 60 - 150 USD per hour English to Tagalog - Rates: 0.06 - 0.18 USD per word / 60 - 150 USD per hour English to Urdu - Rates: 0.06 - 0.18 USD per word / 60 - 150 USD per hour
Access to Blue Board comments is restricted for non-members. Click the outsourcer name to view the Blue Board record and see options for gaining access to this information.
Australian dollars (aud), Brunei dollar (bnd), Canadian dollars (cad), Swiss francs (chf), Euro (eur), Sri Lanka rupees (lkr), New Zealand dollars (nzd), Singapore dollars (sgd), U. S. dollars (usd)
Portfolio
Sample translations submitted: 11
English to Tamil: Protecting World's Fragile Peat-Lands General field: Science Detailed field: Environment & Ecology
Source text - English Belarus Shows Model For Protecting World’s Fragile Peat-lands
As delegates from around the world gather this week at an international biodiversity conference in Nagoya, Japan, a project supported by the United Nations Development Programme (UNDP) and Global Environment Facility (GEF) is being presented as a successful model for protection of a uniquely rich area of wildlife.
The tenth conference of parties (COP10) to the 1992 Convention on Biological Diversity, from 18 to 29 October, will focus in depth on inland, coastal, marine and mountain environments and look at the impact of climate change, and arrangements for protection and sustainable use of ecologically sensitive areas.
Among the world’s fragile sites are the more than four million square kilometers of peatland in 180 countries. A four-year UNDP-GEF –backed project completed this year has succeeded in safeguarding 28,200 hectares of Belarus’ peat swamps that cover some 6.4 percent of the country.
The 2006-2010 restoration project, focused on 17 swamp areas that had been drained between 1950 and 1990 due to large-scale extraction or agriculture works. The peat was mined due to its value as a fuel source and material for insulation.
Drainage of the sites dried the earth, making them highly vulnerable to long-burning fires that released approximately 235,000 tons of CO2 annually. Rehydration of the swamps—by filling drainage ditches and building dams to raise groundwater levels—extinguished the fires and cut public spending on firefighting by an estimated US$ 1.5 million annually.
Restoration, which cost an average of US$50 toUS$100 per hectare, also halted the CO2 emissions, and created a more fertile environment for cranberry picking, fishing, hunting and tourism, and for flora and fauna, including endangered birds such as the Curlew and the Greater spotted Eagle.
“We hope that parties at this conference will prioritize the protection, restoration and wise use of the world’s peat-lands as essential and cost-effective measures for biodiversity conservation and ecosystem based mitigation and adaptation,” said Nik Sekhran, UNDP’s principal technical adviser on biodiversity.
The Belarus project led to the Government’s adoption of a policy on peat-land areas where mining activity has taken place. According to the policy, disturbed areas are to be restored at the end of their “economic life”. They had previously been turned into reservoirs or forestland.
The project team is currently sharing its experiences with the Intergovernmental Panel on Climate Change, and supporting negotiations to include peat-lands in future carbon trading mechanisms under the United Nations Framework Convention on Climate Change.
Peat-lands store about one-third of global soil carbon and are one of the planet’s major carbon pools.
Translation - Tamil உலகின் வலுவற்ற முற்றா நிலக்கரி நிலங்களைப் பாதுகாப்பதில் பெலாருஸ் காட்டும் மாதிரி
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP), உலக சுற்றுச்சூழல் வசதியமைப்பு நிறுவனம் (GEF) என்பவற்றின் உதவியுடன் ஜப்பானின் நகோயா நகரில் இவ்வாரம் இடம்பெறும் சர்வதேச உயிர்ப்பல்வகைமை மாநாட்டில் உலகெங்கிலுமிருந்து வரும் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் நிலையில் அதில் காட்டுயிர் வளம் மிக்க தனிச் சிறப்பான பிரதேசமொன்றைப் பாதுகாப்பது தொடர்பில் வெற்றிகரமான மாதிரியொன்றை அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஒக்டோபர் 18 முதல் 29 வரை நடைபெறும் 1992 இன் உயிர்ப் பல்வகைமை ஒப்பந்தக் குழுக்களின் பத்தாவது மாநாடு (COP10) உள் நாட்டு, கரையோர, கடலியல், மலைச் சூழல்களைப் பற்றி ஆழமாகக் கவனிப்பதோடு காலநிலை மாற்றத்தின் தாக்கம், சூழலியல் தொடர்பில் உணர்ச்சி மிக்க பகுதிகளைப் பாதுகாத்தல் மற்றும் திறம்படப் பயன்படுத்தல் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் என்பவற்றையும் நன்கு அவதானிக்கும்.
உலகின் வலுவற்ற பிரதேசங்களில் 180 நாடுகளைச் சேர்ந்த நான்கு மில்லியன் சதுர கிலோமீற்றர் பரப்பளவிற்கும் கூடுதலான முற்றா நிலக்கரி நிலங்கள் உள்ளன. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்திம், உலக சுற்றுச்சூழல் வசதியமைப்பு நிறுவனம் என்பவற்றின் கூட்டான தூண்டலில் இவ்வாண்டு நிறைவேறிய திட்டமொன்று பெலாருஸ் நாட்டின் 6.4 சதவீதத்தைத் தன்னகத்தே அடக்கும் 28,200 ஹெக்டேயர் முற்றா நிலக்கரிச் சதுப்பு நிலத்தைப் பாதுகாப்பதில் வெற்றி கண்டுள்ளது.
2006-2010 மீளமைப்புத் திட்டமானது 1950 இற்கும் 1990 இற்கும் இடையில் நிகழ்ந்த பெரியளவிலான அகழ்வு அல்லது விவசாய வேலைகள் காரணமாக காய்ந்து போன 17 சதுப்பு நிலப் பிரதேசங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியது.
அப்பிரதேசங்கள் காய்ந்து போதலால் நிலம் வறண்டு ஆண்டு தோறும் கிட்டத்தட்ட 235,000 தொன் காபனீரொட்சைட்டை வெளியிடும் நீண்டு எரியும் தீப்பற்றலுக்கு வெகு இலகுவாக அகப்படக்கூடியதாகின்றன. சாக்கடைக் காண்களை நிரப்புதல், அணைக்கட்டுக்களைக் கட்டுதல் என்பவற்றால் நிலத்து நீரின் அளவை உயர்த்துவதன் மூலம் சதுப்பு நிலங்களை மீள ஈரலிப்பாக்குதல் தீப்பற்றலை இல்லாமலாக்கியதுடன் தீயணைப்புக்காக ஆண்டு தோறும் செலவழிக்கும் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் அரச செலவைக் குறைத்துள்ளது.
ஒரு ஹெக்டேயர் நிலத்திற்கு சராசரியாக 50 முதல் 100 அமெரிக்க டொலர் வரை செலவாகும் மீளமைத்தல் செயற்பாடு காபனீரொட்சைட்டு வெளியேற்றத்தை நிறுத்தியதுடன் கிரேன்பெர்ரி பறித்தல், மீன்பிடித்தல், வேட்டையாடுதல், சுற்றுலா என்பவற்றுடன் தாவரங்களுக்கும் கர்லூ, பெரும்புள்ளிப் பருந்து போன்ற அருகிய பறவைகள் உட்பட ஏனைய விலங்குகளுக்குமான வாழிடம் என்பவற்றுக்குப் பொருத்தமான வளம் மிக்க சுற்றாடலைத் தோற்றுவித்தது.
"இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் குழுக்கள் உலகின் முற்றா நிலக்கரி நிலங்களைப் பாதுகாத்தல், மீளமைத்தல், திறம்படப் பயன்படுத்துதல் என்பவற்றை தேவையானது என்பதாலும் செலவு குறைந்த உயிர்ப்பல்வகைமை, அமைதிப்படுத்தலும் தழுவலும் என்பவற்றின் அடிப்படையிலான சூழற்றொகுதிக் காப்பு நடவடிக்கை என்பதாலும் முக்கியத்துவம் அளிக்கும்" என நாம் நம்புகிறோம் என்றார் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் உயிர்ப்பல்வகைமை தொடர்பான முதன்மை தொழினுட்ப ஆலோசகர் நிக் செக்ரான்.
பெலாருஸ் திட்டம் அகழ்வு நடவடிக்கைகள் நடைபெற்ற முற்றா நிலக்கரி நிலங்கள் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் கொள்கை ஒன்றை வகுத்துக்கொள்ள வழிவகுத்தது. அக்கொள்கையின் படி, குழப்பப்பட்ட பகுதிகள் அவற்றின் "பொருளாதார வாழ்வின்" இறுதியில் மீளமைக்கப்பட வேண்டும். அவை முன்னர் நீர்நிலைகளாகவோ காட்டு நிலங்களாகவோ மாறியிருந்தன.
இத்திட்டக் குழு தற்போது அதன் அனுபவங்களை காலநிலை மாற்றம் தொடர்பான அரசாங்கங்களின் குழுவுடன் பகிர்ந்து கொள்வதுடன் காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் திட்ட ஒப்பந்தத்தின் கீழ் எதிர்கால காபன் வணிகப் பொறிமுறைகளில் முற்றா நிலக்கரி நிலங்களை உள்ளடக்குவது பற்றிய பேச்சுவார்த்தைகளுக்கும் உதவுகிறது.
முற்றா நிலக்கரி நிலங்கள் உலகின் மண் காபன் வளத்தில் கிட்டத்தட்ட மூன்றிலொரு பகுதியைக் கொண்டுள்ளதுடன், அவை புவியின் முதன்மையான காபன் வளங்களுள் ஒன்றாகும்.
English to Tamil: Literary Criticism General field: Art/Literary Detailed field: Poetry & Literature
Source text - English Literary Criticism, discussion of literature, including description, analysis, interpretation, and evaluation of literary works. Like literature, criticism is hard to define. One of the critic’s tasks is to challenge definitions of literature and criticism that seem too general, too narrow, or unworkable for any other reason. Whatever it is, literary criticism deals with different dimensions of literature as a collection of texts through which authors evoke more or less fictitious worlds for the imagination of readers.
We can look at any work of literature by paying special attention to one of several aspects: its language and structure; its intended purpose; the information and worldview it conveys; or its effect on an audience. Most good critics steer clear of exclusive interest in a single element. In studying a text’s formal characteristics, for example, critics usually recognize the variability of performances of dramatic works and the variability of readers’ mental interpretations of texts. In studying an author’s purpose, critics acknowledge that forces beyond a writer’s conscious intentions can affect what the writer actually communicates. In studying what a literary work is about, critics often explore the complex relationship between truth and fiction in various types of storytelling. In studying literature’s impact on its audience, critics have been increasingly aware of how cultural expectations shape experience.
Because works of literature can be studied long after their first publication, awareness of historical and theoretical context contributes to our understanding, appreciation, and enjoyment of them. Historical research relates a work to the life and times of its author. Attention to the nature, functions, and categories of literature provides a theoretical framework joining a past text to the experience of present readers. The tradition of literary criticism surveyed here combines observations by creative writers, philosophers, and, more recently, trained specialists in literary, historical, and cultural studies.
Translation - Tamil இலக்கிய விமர்சனம் என்பது இலக்கியம் பற்றிய விளக்கம், பகுப்பாய்வு, கருத்துக் கூறல், இலக்கிய ஆக்கங்களை மதிப்பீடு செய்தல் உட்பட இலக்கியங்கள் பற்றிய ஆராய்தலாம். இலக்கியம் என்பதைப்போல விமர்சனம் என்பதும் விவரிக்கக் கடினமானதே. விமர்சகரின் நோக்கங்களிலொன்று இலக்கிய விவரணம், மிகச் சாதாரணமான, மிகக் குறுகிய அல்லது வேறு காரணங்கள் என்பவற்றின் அடிப்படையில் பயனற்ற விமர்சனங்களுக்குச் சவால் விடுவதாகும். எது எப்படியிருந்தாலும், இலக்கிய விமர்சனமானது வாசகரின் எண்ணவோட்டத்திற்கென ஆசிரியரின் அதிகமான அல்லது குறைவான கற்பனையிலமைந்த உலகத்தைக் காட்டும் எழுத்துக்களின் தொகுப்பான இலக்கியத்தின் பல்வேறு கோணங்கள் குறித்தும் ஆராயக்கூடியதாகும்.
இலக்கியத்தின் மொழிப் பயன்பாடு, அதன் கட்டமைப்பு, அதன் மூலமான நோக்கம், அதனால் வெளிப்படுத்தப்படும் தகவல், அது காட்டும் உலகு, அல்லது அது குறிப்பிட்ட ஒரு வாசகரின்மீது ஏற்படுத்தும் தாக்கம் முதலான ஏதாவதொரு பகுதியின் பக்கம் விசேட கவனம் செலுத்துவதன் மூலம் நாம் எந்தவொரு இலக்கிய ஆக்கத்தையும் நன்கு நோக்கலாம். அநேகமான நல்ல விமர்சகர்கள் தனியொரு விடயத்தின் மீதே முழுக் கவனத்தையும் செலுத்தாது தப்பித்துக் கொள்கின்றனர். உதாரணமாக எழுத்துப் பகுதியொன்றின் மரபு வழி இயல்புகளைப் பற்றி ஆராய்கையில், விமர்சகர்கள் தெளிவான காட்சி மாற்றங்களையும் எழுத்துப் பகுதி தொடர்பாக வாசகரில் ஏற்படும் எண்ணவோட்ட மாற்றங்களையும் வழமையாகக் கவனத்திற் கொள்கின்றனர். ஒரு ஆசிரியரின் நோக்கம் பற்றி ஆராய்கையில் விமர்சகர்கள், எழுத்தாளரின் நிதானமான மனநிலைக்கு அப்பாற்பட்ட சக்திகள் எழுத்தாளர் உண்மையிலேயே சொல்லவந்த விடயங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஒத்துக்கொள்கின்றனர். ஒரு இலக்கிய ஆக்கம் எப்படிப்பட்டது என்பது குறித்து ஆராயும் விமர்சகர்கள் பல்வேறுவிதமான கதைகூறல்களில் உண்மைக்கும் கற்பனைக்கும் இடையிலான சிக்கலான தொடர்புகளை அடிக்கடி காண்கின்றனர். வாசகர் மீதான இலக்கியத்தின் தாக்கம் குறித்து ஆராய்கையில், கலாச்சார எதிர்பார்ப்புக்கள் எவ்வாறு அனுபவங்களை உருவமைக்கின்றன என்பதை விமர்சகர்கள் ஊன்றிக் கவனிக்கின்றனர்.
இலக்கிய ஆக்கங்களின் முதல் பதிப்பிலிருந்தே அவற்றைப் பற்றி நெடுங்காலம் வரை ஆராயப்படலாம் என்பதால், வரலாற்று ரீதியான மற்றும் கருத்தியல் ரீதியான அமைப்புக்களைத் தெரிந்து வைத்திருத்தல், அவற்றைப் பற்றிய எமது புரிந்து கொள்ளல், பாராட்டுதல், இன்புறுதல் என்பவற்றில் பங்கு கொள்கிறது. ஒரு ஆக்கத்தின் வரலாற்று ஆராய்தலானது அதன் ஆசிரியரின் வாழ்க்கை, அவர் வாழ்ந்த காலம் என்பவற்றைப் பற்றித் தெளிவுபடுத்துகிறது. இலக்கியத்தின் தன்மை, நோக்கம், வகைப்படுத்தல் என்பவற்றில் கவனம் செலுத்துவதானது நிகழ்கால வாசகரின் அனுபவத்தில் கடந்த கால எழுத்தாக்கத்தினூடான கருத்தியல் கட்டமைப்பொன்றை ஏற்படுத்துகிறது. இங்கு ஆராயப்பட்டிருக்கும் இலக்கிய விமர்சன மரபானது, ஆக்கபூர்வமான எழுத்தாளர்களினதும் தத்துவஞானிகளினதும், அண்மைய காலத்தில் இலக்கிய, வரலாற்று, கலாசாரக் கற்கைகளில் விசேடமாகப் பயிற்றப்பட்ட நிபுணர்களினதும் அபிப்பிராயங்களை இணைத்துக் கொண்டுள்ளது.
English to Tamil: Writing General field: Art/Literary Detailed field: Linguistics
Source text - English Writing, a way of recording language in visible form and giving it relative permanence. Until the invention of audio recording, speech was limited to those within earshot or on the other end of a telephone, and it faded away immediately, except in the memories of speaker and hearer. Writing overcomes this limitation and allows not only the storage of immense amounts of information but its transmission to wherever a written message may be conveyed.
Writing is, therefore, a powerful instrument for transmitting culture from generation to generation. It plays a crucial role in the development and continuation of complex civilizations, with their elaborate technologies and economies, bodies of literature, codes of law, and other specializations, each with its own body of knowledge to be preserved and transmitted. Some civilizations, such as that of ancient India and of Viking Scandinavia, preserved amazing quantities of verbal material with remarkably little change over long periods of time through sheer painstaking memorization. But such a process has severe limitations, and the expenditure of human energy is immense.
Translation - Tamil எழுதுதல் என்பது பார்க்கும் விதத்தில் மொழியைப் பதிவதும் அதற்கு ஓரளவு நிலையான தன்மையை அளிப்பதும் ஆகும். ஒலிப்பதிவு முறை கண்டுபிடிக்கப்படும்வரையில், பேசுபவரினதும் கேட்பவரினதும் ஞாபகத்திலிருத்தலன்றி, பேச்சானது செவிமடுக்கக்கூடிய தூரத்திலிருப்பவர் அல்லது தொலைபேசியின் மறு முனையிலிருப்பவர் என்ற எல்லைக்குள்ளேயே மட்டுப்பட்டிருந்ததுடன் விரைவில் மறைந்துவிடக்கூடியதாயுமிருந்தது. எழுதுதல் இம்மட்டுப்படுதலை வெற்றிகொள்வதுடன் பெருமளவிலான தகவல்களைச் சேகரித்து வைத்தல் மட்டுமன்றி எழுதப்பட்ட செய்தியைக் கொண்டு செல்லத் தக்க இடமெல்லாம் அவற்றைக் கடத்துவதையும் இயலுமாக்குகிறது.
எனவே, எழுதுதல் என்பது நாகரிகத்தைச் சந்ததி சந்ததியாகக் கடத்தக்கூடிய ஒரு வலுவான கருவியாகும். அபிவிருத்தியிலும் சிக்கலான நாகரிகங்களின் நீடித்தலிலும் அவற்றின் விரிவான தொழினுட்பங்களும் பொருளாதாரங்களும் இலக்கிய ஆக்கங்கள், சட்டத் தொகுப்புக்கள், ஏனைய துறைகள் என்பவற்றிலும் ஒவ்வொன்றும் அதனதன் அறிவுசார் ஆக்கங்களுடன் பாதுகாக்கப்படுவதிலும் கடத்தப்படுவதிலும் அது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வெறுமனே மிகக் கடினமான மனப்பாடம் செய்வதினூடாக புராதன இந்தியா, வைக்கிங்கு இசுக்கண்டினேவியா போன்ற நாகரிகங்கள் அதிசயிக்கத்தக்க அளவிலான வாய்வழி விடயங்களைக் குறிப்பிடத்தக்க அளவு மிகக் குறைந்த மாறுதல்களுடன் நெடுங்காலம் வரை பாதுகாத்துள்ளன. எனினும், அவ்வாறான வழிமுறையானது கடினமான மட்டுப்படுதல்களையும் மிகப் பெரிய மனிதவலுச் செலவையும் கொண்டிருக்கிறது.
English to Tamil: Evolution and Islam General field: Social Sciences Detailed field: Religion
Source text - English The theory of evolution is no substitute for God’s Creation, but it is an explanation for the Laws of God that prevail in nature.
In other words: it does not explain how species evolve, but rather it describes the system of laws God applied in developing these species.
Intelligent design described herewith points to the fact that the laws of nature created by God do not function by themselves, because they are dependent upon God’s knowledge and God’s intention.
The evolution of successive “versions” of species is a description of the fact that God invents a new and creative design for his creatures in each environment.
Instead of simply being in awe at God’s creativity in designing and creating millions of living creatures and plants, the theory of evolution explains that God continuously shows His creativity by designing and crafting different “versions” of each such species.
Aging From the Islamic Perspective
In advanced age, God lets a tire of life and a yearning for quiet grow within man. This spiritual state helps those who have the Ieman to part and “move” to Janna. In this chapter of life, God allows man to feel the transient nature of this carnal life, and enhances the pursuit of eternal joy in the Afterlife.
This spiritual state “translates” the Divine Book of this Life for man. This book, with its letters and words, points to the characteristics of its Creator and “tells” man:
Someone who only sees this life and believes that it does not continue afterwards is overwhelmed by loss in times of grief or pain, catastrophes or long illnesses.
………….
Surely, in relation to man’s life on Earth, which has existed for numerous tens of thousands of years, the life of an individual of approximately 80 years seems relatively short. Following the latter, reward or punishment occur for the length of eternity.
Translation - Tamil கூர்ப்புக் கோட்பாடானது இறைவனின் படைப்பு என்பதற்கு மாற்றீடன்று. மாறாக, அது இயற்கையில் காணப்படும் இறைவனின் விதிகளுக்கான ஒரு விளக்கமாகும்.
வேறு சொற்களில் சொல்வதானால், அது எவ்வாறு உயிரினங்கள் தோன்றுகின்றன என விளக்குவதில்லை. மாறாக, அது உயிரினங்களை விருத்தி செய்வதில் இறைவன் மேற்கொண்ட செயன்முறையை விளக்குவதாகும்.
இங்கு விளக்கப்பட்டுள்ள அறிவுசார் வடிவமைப்பு என்பது இறைவனால் படைக்கப்பட்ட இயற்கை விதிகள் தானாக இயங்குவதில்லை எனச் சுட்டிக் காட்டுகிறது. ஏனெனில், அவை இறைவனின் அறிவிலும் இறைவனின் நாட்டத்திலும் தங்கியிருக்கின்றன.
இனங்களின் தொடர்ச்சியான “பதிப்புக்களின்” கூர்ப்பானது, இறைவன் ஒவ்வொரு சூழலிலும் அவனுடைய படைப்புகளுக்கெனப் புதியதும் வினைத்திறன் மிக்கதுமான ஒரு வடிவமைப்பை ஏற்படுத்துகிறான் என்பதன் விளக்கமாகும்.
மில்லியன் கணக்கான உயிருள்ள படைப்புக்களையும் தாவரங்களையும் வடிவமைப்பதிலும் படைப்பதிலும் இறைவனின் படைப்புத்திறன் குறித்து மலைத்திருப்பதற்குப் பதிலாக, கூர்ப்புக் கோட்பாடானது ஒவ்வொரு உயிரினத்தினதும் வெவ்வேறு “பதிப்புக்களை” வடிவமைப்பதிலும் செம்மையாக்குவதிலும் அவன் தன்னுடைய படைப்புத்திறனைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்துகிறான் என விளக்குகிறது.
இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் முதுமையடைதல்
முதிய வயதாகும் போது, வாழ்க்கையில் களைப்பையும் அமைதிக்கான ஏக்கத்தையும் இறைவன் மனிதனில் ஏற்படுத்துகிறான். இந்த ஆன்மிக நிலையானது ஈமானுள்ளவர்கள் உலகைப் பிரிந்து சுவனத்திற்கு “நகர” உதவுகிறது. வாழ்க்கையின் இந்தப் பகுதியில், இறைவன் இம்மை வாழ்வின் நிலையற்ற தன்மையை மனிதன் உணர வழி செய்வதுடன் மறுமை வாழ்வில் நிலையான இன்பத்தை நுகரத் தூண்டுகிறான்.
இந்த ஆன்மிக நிலையானது, இம்மை வாழ்க்கையின் இறைநூலை மனிதனுக்கு “மொழிபெயர்த்துக்” கொடுக்கிறது. இந்நூலானது, அதனுடைய எழுத்துக்களாலும் சொற்களாலும் படைப்பாளனுடைய தன்மைகளை எடுத்துக் காட்டுவதுடன் அதனை மனிதனுக்குக் “கூறுகிறது”:
இம்மை வாழ்க்கையை மட்டும் பார்த்துவிட்டு இதன் பின்னர் இது தொடர மாட்டாதென நம்பிக்கை கொள்ளும் ஒருவர் காலப் போக்கில் துன்பம் அல்லது வலி, பெருங் கேடுகள், நீண்ட நோய்கள் முதலியன ஏற்படும்போது இழப்பினால் ஆட்கொள்ளப்படுகிறார்.
....................
உறுதியாக, புவியில் பல பத்தாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடரும் மனித வாழ்க்கையைக் கருதுகையில், கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் நீடிக்கும் தனிமனித வாழ்க்கை மிகவும் சிறியதாகவே தோன்றுகிறது. அதனைத் தொடர்ந்து, காலாதி காலத்துக்கும் நற்கூலியோ அல்லது தண்டனையோ வழங்கப்படுகிறது.
English to Sinhala (Sinhalese): VOLUNTARY ASSISTED RETURN AND REINTEGRATION PROGRAMME General field: Social Sciences Detailed field: Government / Politics
Source text - English VOLUNTARY ASSISTED RETURN AND REINTEGRATION PROGRAMME
Dear Mr/Ms
You have returned to your home country under the assistance of IOM London Voluntary Assisted Return and Reintegration Programme (VARRP). The UK IOM Reintegration Fund aims to assist you with your individual reintegration needs as well as those of each member of your family returning with you. Your needs have been discussed with IOM UK staff and recorded in your individualised return plan (IRP) which has been sent to the IOM mission in your country in order to make them aware of your individual return and reintegration needs.
As you are aware the IOM Reintegration Fund may take different forms and your financial assistance can be invested in the following ways:
a) access to education d) job placement
b) job or vocational training e) short term accommodation
c) child care (where applicable) f) establishment of small businesses or further
development of existing businesses
The reintegration payment for opening businesses has a total value of £2000 and will be provided in two separate payments: an initial payment of £1500 and a second payment of £500 six months after return, if the business is still operational.
The assistance is not given in cash but is given out in the form of targeted payments to suppliers of equipment or services.
Please note that opportunities vary from country to country and we will, therefore, not be in a position to guarantee your selected assistance, although IOM will do its best to assist you.
When you return home, we encourage you to take a pro active role to identify the reintegration activity of your choice and bring them to the attention of the IOM office. IOM will then consider your request. You will have a period of 3 months after your return to make sure that you contact the IOM office so that the reintegration assistance discussion may begin. You will also need to use all available funds within 9 months of return.
In order to receive assistance it is very important that you contact the IOM office in your country as soon as possible to discuss your individual needs. Their contact details are as follows:
PLEASE ENSURE YOU INFORM THE IOM OFFICE IN YOUR COUNTRY OF ANY CHANGES IN CONTACT DETAILS (e.g. new telephone number or address).
I hereby confirm that I was made aware
of the information above while discussing my IRP
___________________________
English to Sinhala (Sinhalese): Letter General field: Social Sciences Detailed field: International Org/Dev/Coop
Source text - English National Human Rights Commission
Jayamal Perera
Letter
1. How are you? This is the Human Rights Consulting Center of the National Human Rights Commission of Korea.
2. We are hereby sending you this in reply to your "Request for Early Release."
3. The Commission defines "the sexual harassment" as the objects of its investigation "in case that human rights, which are guaranteed in Article 10 & 22 of the Constitution, are violated or any discriminations take place "regarding the duty performances by state organs, district self-governing bodies, and institutions for detention & protection (excluding the legislations of the National Assembly and the judgments by courts & the Constitutional Court)" and "any discriminations by any corporations, organizations or persons take place," under Clause 1, Article 30 of the law of the National Human Rights Commission of Korea.
4. Your case of request for early release is not the one that the Commission can be involved in. So, in reference to the case of early release, please ask for help from the Ministry of Justice. Thank you.
The Chairperson of the National
Human Rights Commission
of Korea
English to Sinhala (Sinhalese): Green Heroes General field: Science Detailed field: Environment & Ecology
Source text - English Environment
GREEN HEROES
These torchbearers have done their bit to make their patch a better place—and heal the world
Usha Rai
Sixty-two-year-old Abdul Kareem put his protective arm around a rocky hillside and nurtured it till it bloomed. This tall, lanky college dropout has single-handedly generated forests on an area covering 32 acres between Kasargod and Payyannur.
As a youngster, Kareem worked in Mumbai as a labourer in the dockyards, and in the Gulf he was with a travel and placement agency. Having done well for himself, he returned home to Nileshwar, his village in Kerala, and got married. During trips to his in-law’s home in Puliyamkulam, about 20km from Nileshwar, he was disturbed at the sight of a totally denuded hill. Reminded of the stories of his ancestors’ sacred groves, he yearned for one of his own. Inspired by the Arabs’ success story of greening deserts, he decided to forest the barren hill and make it his very own kaavu or sacred grove.
English to Tamil: Ceylon Burgers General field: Art/Literary Detailed field: History
Source text - English The history of Sri Lanka begins around 30,000 years ago when the island was first inhabited.
Chronicles, including the Mahavamsa, the Dipavamsa, the Culavamsa and the Rajavaliya record events from the beginning of the Sinhalese monarchy in the 6th century BC through the arrival of European Colonialists in the 16th century and to the disestablishment of the monarchy in 1815.
Some mentions of the country are found in the Ramayana, the Mahabharata and the books of Gautama Buddha’s teachings.
Buddhism was introduced in the 3rd century BC by Arahath Mahinda (son of the Indian emperor Ashoka the Great).
From the 16th century, some coastal areas of the country were ruled by the Portuguese, the Dutch and the British.
Sri Lanka was ruled by 181 kings from the Anuradhapura to Kandy periods.
After 1815, the entire nation was under British colonial rule and armed uprisings against the British took place in the 1818 Uva Rebellion and the 1848 Matale Rebellion.
Independence was finally granted in 1948 but the country remained a Dominion of the British Empire.
Portuguese era
The first Europeans to visit Sri Lanka in modern times were the Portuguese; Lourenco de Almeida arrived in 1505 and found that the island, divided into seven warring kingdoms, was unable to fend off intruders.
The Portuguese founded a fort at the port city of Colombo in 1517 and gradually extended their control over the coastal areas.
In 1592, the Sinhalese moved their capital to the inland city of Kandy, a location more secure against attack from invaders.
Intermittent warfare continued through the 16th century.
Many lowland Sinhalese were forced to convert to Christianity while the coastal Moors were religiously persecuted and forced to retreat to the Central highlands.
The Buddhist majority disliked the Portuguese occupation and its influences, welcoming any power who might rescue them.
When the Dutch captain Joris van Spilbergen landed in 1602, the king of Kandy appealed to him for help.
Dutch era
Rajasinghe II, the king of Kandy, made a treaty with the Dutch in 1638 to get rid of the Portuguese who ruled most of the coastal area of the island.
The main conditions of the treaty were that the Dutch should handover the coastal areas they capture to the Kandyan king and the king should grant the Dutch a monopoly over trade on the entire island.
The agreement was breached by both parties.
By 1660, the Dutch controlled the whole island except the Kingdom of Kandy and it was not until 1656 that Colombo fell.
The Dutch (Protestants) persecuted the Catholics and the remaining Portuguese settlers, left the Buddhists, Hindus and Muslims alone.
The Dutch taxed the people far more heavily than the Portuguese had done.
In 1659, the British sea captain Robert Knox landed by chance on Sri Lanka and was captured by the king of Kandy, along with sixteen sailors.
He and another sailor escaped 19 years later and wrote an account of his stay.
This helped to bring the island to the attention of the British.
A legacy of the Dutch period in Ceylon is the Dutch Burghers, a people of mixed Dutch and local origin.
A later definition of the Burgher people of Ceylon was handed down in 1883 by the Chief Justice of Ceylon, Sir Richard Ottley.
Translation - Tamil கிட்டத்தட்ட 30,000 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தீவு முதன் முறையாக வசிப்பிடமாக்கப் பட்டதிலிருந்து இலங்கையின் வரலாறு தொடங்குகிறது.
மகாவம்சம், தீபவம்சம், சூலவம்சம், இராஜாவலியா உட்பட வரலாற்றேடுகள் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் சிங்கள முடியாட்சியின் தொடக்கத்திலிருந்து 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியக் குடியேற்றவாதிகளின் வருகை உட்பட 1815 இல் முடியாட்சி கலைக்கப்படும் வரையான நிகழ்ச்சிகளைப் பதிவு செய்கின்றன.
இந்நாட்டைப் பற்றிய சில குறிப்புகள் இராமாயணம், மகாபாரதம், கௌதம புத்தரின் போதனைகள் அடங்கிய நூற்கள் என்பவற்றிற் காணப்படுகின்றன.
புத்த சமயம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் (இந்தியப் பேரரசர் மகா அசோகரின் மகனான) அரகத்து மகிந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
16 ஆம் நூற்றாண்டிலிருந்து, நாட்டின் சில கரையோரப் பகுதிகள் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் ஆகியோரால் ஆளப்பட்டன.
அனுராதபுரிக் காலப்பகுதியில் இருந்து கண்டிக் காலப்பகுதி வரை இலங்கை 181 மன்னர்களால் ஆளப்பட்டது.
1815 இற்குப் பின் முழு நாடும் பிரித்தானியக் குடியேற்றத்தின் கீழிருந்தது; 1818 இன் ஊவா கலகம், 1848 இன் மாத்தளைக் கலகம் என்பவற்றின் மூலம் பிரித்தானியருக்கு எதிரான ஆயுதக் கிளர்ச்சிகள் நடைபெற்றன.
இறுதியாக 1948 இற் சுதந்திரம் வழங்கப் பட்டாலும் இந்நாடு பிரித்தானியப் பேரரசின் முடிக்குட்பட்ட நாடாகத் திகழ்ந்தது.
போர்த்துக்கேயர் காலம்
நவீன காலத்தில் இலங்கைக்கு வந்திறங்கிய முதலாவது ஐரோப்பியர் போர்த்துக்கேயர் ஆவர்; 1505 இல் உலோரன்சோ த அல்மெய்டா வந்திறங்கிய போது ஒன்றுக்கொன்று போரிடும் ஏழு இராச்சியங்களாக இருந்த இத்தீவு வேண்டா விருந்தாளிகளாக நுழைவோரைத் துரத்தியடிக்க முடியாமல் இருக்கக் கண்டான்.
1517 இல், போர்த்துக்கேயர்கள் துறைமுக நகரான கொழும்பில் ஒரு கோட்டையை நிறுவி, கரையோரப் பகுதிகளிற் படிப்படியாகத் தமது கட்டுப்பாட்டை விரிவாக்கினர்.
1592 இல், சிங்களவர்கள் தமது தலைநகரைப் படையெடுப்பாளர்களின் தாக்குதலிலிருந்து மேலும் பாதுகாப்பளிக்கும் ஓர் அமைவிடமான உள் நாட்டு நகரான கண்டிக்கு மாற்றினர்.
16 ஆம் நூற்றாண்டு முழுவதும் இடையிடையே போர் தொடர்ந்தது.
கீழ் நாட்டுச் சிங்களவர் பலர் கிறித்தவத்துக்கு மாறுமாறு நிர்ப்பந்திக்கப்பட்ட அதே வேளை கரையோரச் சோனகர்கள் சமய அடிப்படையிலான அடக்குமுறைக்கு உள்ளாக்கவும் மத்திய மலைநாட்டை நோக்கிப் பின்வாங்க நிர்ப்பந்திக்கவும் பட்டனர்.
பெரும்பான்மையினரான பௌத்தர்கள் போர்த்துக்கேய ஆக்கிரமிப்பையும் அதன் செல்வாக்கையும் விரும்பாமல், தம்மை மீட்கக்கூடிய எவரையும் வரவேற்போராக இருந்தனர்.
ஒல்லாந்துத் தளபதி ஜோரிஸ் வான் ஸ்பில்பேர்கன் 1602 இற் கரையிறங்கிய போது, கண்டி மன்னன் அவனிடம் உதவி கோரினான்.
ஒல்லாந்தர் காலம்
தீவின் கரையோரப் பகுதிகளிற் பெரும் பகுதியை ஆட்சி செய்த போர்த்துக்கேயரிடமிருந்து விடுதலை பெறுவதற்காக, கண்டி மன்னனான இரண்டாம் இராசசிங்கன் 1638 இல் ஒல்லாந்தருடன் ஓர் ஒப்பந்தம் செய்தான்.
ஒல்லாந்தர் தாம் கைப்பற்றும் கரையோரப் பகுதிகளைக் கண்டி மன்னனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதும் தீவு முழுவதும் வணிகத்தில் ஒல்லாந்தருக்குத் தனியுரிமையை மன்னன் வழங்க வேண்டும் என்பதும் ஒப்பந்தத்தின் முதன்மையான நிபந்தனைகளாக இருந்தன.
அவ்வொப்பந்தம் இரு தரப்பினராலும் மீறப்பட்டது.
1660 மட்டில், கண்டி இராச்சியத்தைத் தவிர முழு தீவையும் ஒல்லாந்தர்கள் ஆண்டனர்; அத்துடன் 1656 வரை கொழும்பு அவர்களிடம் விழவில்லை.
ஒல்லாந்தர் போர்த்துக்கேயரைவிட மிக மிகக் கடுமையாக மக்களுக்கு வரி விதித்தனர்.
1659 இல், பிரித்தானியக் கடற்படைத் தளபதி ரொபர்ட் நொக்ஸ் தற்செயலாக இலங்கையிற் கரையிறங்கிய பின்னர் பதினாறு மாலுமிகளுடன் சேர்த்துக் கண்டி மன்னனாற் சிறைப் பிடிக்கப்பட்டான்.
19 ஆண்டுகளின் பின் அவனும் மற்றொரு மாலுமியும் தப்பிச் சென்ற பின்னர் அவன் தனது தங்குதலைப் பற்றிய ஓர் அறிக்கையை எழுதினான்.
இது இத்தீவைப் பிரித்தானியரின் கவனத்துக்குக் கொண்டுவர உதவியது.
இலங்கையில் ஒல்லாந்தர் கால வழிவாறு களின் எச்சமொன்றாக ஒல்லாந்தரும் உள்ளூர் மக்களும் கலந்த இனமான ஒல்லாந்துப் பறங்கியர் காணப்படுகின்றனர்.
இலங்கையின் பறங்கிய இனத்தினரைப் பற்றிய பிற்கால வரைவிலக்கணம் ஒன்று 1883 இல் இலங்கையின் தலைமை நீதிபதி சேர் ரிச்சர்டு ஒட்லீயினால் வழங்கப்பட்டது.
English to Tamil: Titan General field: Science Detailed field: Astronomy & Space
Source text - English Titan is the only moon in the solar system with a thick atmosphere, and the only world besides the Earth known to have lakes and seas on its surface.
However, with a frigid surface temperature of around minus 290 degrees Fahrenheit (94 kelvins), the rain that falls from Titan’s skies is not water but instead liquid methane and ethane, compounds that are normally gasses on Earth.
Neish and her team made the discovery by comparing craters on Titan to craters on Jupiter’s moon Ganymede.
Ganymede is a giant moon with a water ice crust, similar to Titan, so craters on the two moons should have similar shapes.
However, Ganymede has almost no atmosphere and thus no wind or rain to erode its surface.
“We found that craters on Titan were on average hundreds of yards (meters) shallower than similarly sized craters on Ganymede, suggesting that some process on Titan is filling its craters,” says Neish, who is lead author of a paper about this research published online in the journal Icarus Dec 3, 2012.
The team used the average depth-versus-diameter trend for craters on Ganymede derived from stereo images from NASA’s Galileo spacecraft.
The same trend for craters on Titan was calculated using estimates of the crater depth from data derived from images made by Cassini’s radar instrument.
Titan’s atmosphere is mostly nitrogen with a trace of methane and other more complex molecules made of hydrogen and carbon (hydrocarbons).
The source of Titan’s methane remains a mystery because methane in the atmosphere is broken down over relatively short timescales by sunlight.
Fragments of methane molecules then recombine into more complex hydrocarbons in the upper atmosphere, forming thick, orange smog that hides the surface from view.
Some of the larger particles eventually rain out on to the surface, where they appear to get bound together to form the sand.
“Since the sand appears to be produced from the atmospheric methane, Titan must have had methane in its atmosphere for at least several hundred million years in order to fill craters to the levels we are seeing,” says Neish.
However, researchers estimate Titan’s current supply of methane should be broken down by sunlight within tens of millions of years , so Titan either had a lot more methane in the past, or it is being replenished somehow.
Team members say it’s possible that other processes could be filling the craters on Titan: erosion from the flow of liquid methane and ethane for example.
However, this type of weathering tends to fill a crater quickly at first, then more slowly as the crater rim gets worn down and less steep.
If liquid erosion were primarily responsible for infill, then the team would expect to see a lot of partially filled craters on Titan.
“However, this is not the case,” says Neish. “Instead we see craters at all stages; some just beginning to windblown sand, which fills craters and other features at a steady rate.”
All solid materials under stress flow very slowly over time.
This is called viscous flow, and it is like what to fill the hole and flatten the surface.
Craters on icy satellites tend to get shallower over time as the ice flows viscously, so it’s possible that some of the shallow craters on Titan are simply much older or experienced a higher heat flow than the similarly sized, fresh craters on Ganymede studied in this work.
However Titan’s crust is mostly water ice, and at the extremely low temperatures on Titan, ice shouldn’t flow enough to account for such a large difference in depth compared to the Ganymede craters, according to the team.
Also, just like stream erosion, deformation from viscous flow tends to happen rapidly at first, then more slowly as the material adjusts, so one would expect to see a lot of partially filled craters on Titan if its surface was deforming easily through viscous flow.
Translation - Tamil ஞாயிற்றுத் தொகுதியில் ஒரு தடித்த வளி மண்டலத்தைக் கொண்டுள்ள ஒரே சந்திரன் தைட்டன் ஆகும் என்பதுடன், புவிக்குப் புறம்பாக தனது மேற்பரப்பில் ஏரிகளையும் கடல்களையும் கொண்டுள்ள ஒரே உலகமும் ஆகும்.
எனினும், அண்ணளவாக மறை 290 பாகை பரனைற்று (94 கெல்வின்கள்) எனும் கடுங் குளிரான மேற்பரப்பு வெப்பநிலை காரணமாக, தைட்டனின் வானங்களிலிருந்து பொழியும் மழையானது நீருக்குப் பதிலாக, புவியில் சாதாரணமாக வாயுக்களாக உள்ள மெதேன், எதேன் சேர்க்கைகளின் திரவமாகும்.
கனிமீடு என்பது பிரமாண்டமான நீர்ப் பனி மேலோட்டைக் கொண்டதும் தைட்டனை ஒத்ததுமான ஒரு சந்திரன் என்பதால், இரு சந்திரன்களிலுமுள்ள தரைக்குழிகள் ஒத்த வடிவங்களைக் கொண்டிருக்க வேண்டும்.
எனினும், கனிமீடுக்கு ஏறத்தாழ வளிமண்டலம் இல்லை என்பதால், அதன் மேற்பரப்பை அரிப்பதற்குக் காற்றோ, மழையோ காணப்படா.
“தைட்டனின் தரைக்குழிகளைச் சில செயன்முறைகள் நிரப்ப வேண்டும் எனக் கருதச் செய்யும் வகையில், தைட்டனிலுள்ள தரைக் குழிகள் சராசரியாக நூற்றுக் கணக்கான யார்கள் (மீற்றர்கள்) கனிமீடிலுள்ள அதே அளவான தரைக்குழிகளை விட ஆழமற்றிருப்பதை நாம் கண்டறிந்தோம்,” என்று இணையவழிச் சஞ்சிகையான இக்காரஸ் இல் 2012 திசம்பர் 3 அன்று வெளியான இந்த ஆய்வைப் பற்றிய கட்டுரையின் தலைமை ஆசிரியரான நெய்ஷ் கூறுகிறார்.
இக்குழு நாசாவின் கலிலியோ விண்ணோடத்தி னால் பெறப்பட்ட முப்பரிமாணப் படங்களைக் கொண்டு கனிமீடின் தரைக்குழிகளுக்காக சராசரியான ஆழம்-எதிர்-விட்டம் எனும் போக்கைப் பயன்படுத்தியது.
இதே போக்கே தைட்டனின் தரைக்குழிகளுக்கும் கசினியின் இறேடார் கருவியினாற் பெறப்பட்ட படங்களின் தரவுகளைப் பயன்படுத்தும் அதன் தரைக்குழி ஆழத்தின் மதிப்பீடுகளைப் பயன்படுத்திக் கணக்கெடுக்கப் பயன்பட்டது.
தைட்டனின் வளிமண்டலம் மெதேனினதும் ஏனைய மிகச் சிக்கலான ஐதரசனும் காபனும் கொண்ட (ஐதரோ காபன்கள்) மூலக்கூறுகளினதும் சுவடுகளுடன் பெரும்பாலும் நைதரசனைக் கொண்டதாகும்.
தைட்டனின் மெதேனின் தோற்றுவாய் ஓர் அதிசயமாகவே உள்ளது, ஏனெனில் அவ்வளி மண்டலத்தில் உள்ள மெதேன் சூரிய ஒளியின் காரணமாக ஒப்பீட்டளவில் குறுகிய நேர இடைவெளிகளுக்குள் உடைகின்றது.
பின்னர் மெதேன் மூலக்கூற்றுத் துணிக்கைகள் மேல் வளிமண்டலத்தில் மேலும் சிக்கலான ஐதரோ காபன்களாக மீள ஒன்றிணைந்து மேற்பரப்பைப் பார்வையிலிருந்து மறைக்கும் தடித்த, செம்மஞ்சள் நிறமான புகைப்பனியை உருவாக்குகின்றன.
இறுதியாகச் சில பெரிய துணிக்கைகள் மேற்பரப்பில் மழையாகப் பொழிந்து, மணலை உருவாக்கும் வகையில் அங்கே ஒன்று சேர்வதாகத் தோன்றுகிறது.
"வளிமண்டல மெதேனினாலேயே மணல் உரு வாவதாகத் தோன்றுவதால், நாம் காணும் மட் டங்களுக்கு அதன் தரைக்குழிகளை நிரப்ப அது தனது வளிமண்டலத்தில் குறைந்த பட்சம் சில நூறு மில்லியன் ஆண்டுகளாக மெதேனைக் கொண்டிருந்தாக வேண்டும்" என்கிறார் நெய்ஷ்.
எனினும், தைட்டனின் தற்போதைய மெதேன் பிறப்பாக்கம் சில பத்து மில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியினால் உடைக்கப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்றும், எனவே தைட்டன் கடந்த காலத்தில் இதை விடக் கூடிய மெதேனைக் கொண்டிருந்திருக்க வேண்டும் அல்லது அது எவ்வாறோ மீள உருவாவதாக இருக்க வேண்டுமென மதிப்பிடுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
திரவ மெதேன், எதேன் என்பவற்றின் படிவுகளினாலான அரிப்பு போன்ற வேறு செயன்முறைகள் தைட்டனின் தரைக்குழிகளை நிரப்புவதற்கான சாத்தியம் உள்ளதென்கின்றனர் இக்குழுவின் உறுப்பினர்கள்.
எனினும், இவ்வாறான காலநிலைத் தாக்கம் முதலில் ஒரு தரைக்குழியை விரைவாக நிரப்புவதுடன், பின்னர் தரைக்குழியின் விளிம்பு உடைந்து விடுவதாலும், ஆழங் குறைவதாலும் மெதுவாகிறது.
நிரப்புதலுக்கு திரவ அரிப்பே முன்மையான காரணியாயின், தைட்டனில் ஓரளவு நிரம்பிய தரைக்குழிகள் ஏராளமாக இருக்க வேண்டுமென இக்குழு எதிர்பார்க்கிறது.
“எனினும், இது அப்படியல்ல” என்கிறார் நெய்ஷ். “மாறாக, நாம் எல்லா நிலைகளிலும் உள்ள தரைக்குழிகளைக் காண்கிறோம்; இப்போதுதான் அவற்றிற் சில தரைக்குழிகளையும் ஏனைய அம்சங்களையும் சீரான விகிதத்தில் நிரப்பும் காற்றினால் அடித்துச் செல்லும் மணலைக் கொண்டிருக்கத் தொடங்கியுள்ளன.”
தகவுள்ள எல்லாத் திண்மப் பதார்த்தங்களும் காலப்போக்கில் மிக மெதுவாகவே படிகின்றன.
இது பாகுநிலைப் பாய்வு எனப்படும் அதே வேளை, இது குழியை நிரப்பி, மேற்பரப்பை மட்டமாக்குவது போன்றதாகும்.
பாகு நிலையில் பனி படிவதால், பனிமயமான துணைக்கோள்களிலுள்ள தரைக்குழிகள் காலப் போக்கில் ஆழமற்றுப் போகத் தொடங்குகின் றன என்பதால், தைட்டனிலுள்ள ஆழமற்ற தரைக்குழிகளுள் சில சற்றுப் பழையனவாக அல்லது இந்த ஆராய்ச்சியில் ஆய்வு செய்யப்பட்ட கனிமீடிலுள்ள அதேயளவான புதிய தரைக்குழிகளை விடக் கூடுதலான வெப்பப் பாய்ச்சலை அனுபவித்திருக்கச் சாத்தியமுள்ளது.
எனினும் அக்குழுவினரின்படி, தைட்டனின் மேலோடு பெரும்பாலும் நீர்ப் பனியைக் கொண்டுள்ளதுடன், தைட்டனிலுள்ள மிக மிகத் தாழ்ந்த வெப்பநிலை காரணமாக, கனிமீடின் தரைக்குழிகளுடன் ஒப்பிடுகையில் பெரியளவான வேறுபாட்டை ஏற்படுத்தப் போதியதாக பனி படிவதில்லை.
அத்துடன், ஓடை அரிப்புப் போன்றே பாகு நிலைப் பாய்ச்சலினாலான உருக்குலைவு முதலில் விரைவாகவும், பின்னர் பதார்த்தம் சீரமைந்து கொள்வதால் மெதுவாகவும் ஏற்படு வதுடன், தைட்டனின் மேற்பரப்பு பாகு நிலைப் பாய்ச்சலினால் எளிதாக உருக்குலைந்து இருப்பின், ஒருவர் தைட்டனில் ஓரளவு நிரம்பிய ஏராளமான தரைக்குழிகளைக் காணக்கூடியதாக இருக்கும்.
English to Tamil: Nava Kekulam method of paddy cultivation General field: Science Detailed field: Agriculture
Source text - English Nava Kekulam Method of Paddy Cultivation
Dry sowing of paddy in aswedumised fields is known as kekulama in Sri Lanka.
When dry sowing is done in highland under shifting cultivation, it is called vee hena.
In the past, for kekulama, the fields were ploughed with a new country plough first to get a somewhat deeper tillage, then kept for a few days and dry seeds were sown with the anticipation of rains soon.
Having sown seeds again, farmers ploughed the land with an old worn out plough to cover the seeds.
When the fields are wet, the same operations are done but sprouted seeds are sown instead.
In some paddy tracts under some tanks, certain sections were sown to kekulama and then when the tanks were full with rains, other sections were sown having done the normal wetland land preparation , which includes:
1. First ploughing
2. Cleaning bunds
3. Re-plastering bunds
4. Second ploughing
5. Puddling
6. Levelling
7. Preparing a shallow channel system to drain the fields
8. Sowing sprouted seeds
This combination of above cultural practices apparently has being adopted for centuries with the aim of controlling weeds.
Weed menace is unavoidable because of depletion of soil fertility mainly caused by soil erosion inherent to paddy wetland cultivation.
In depleted soil, weeds grow much more vigorously than paddy because the fertility level and other physical conditions are idea for weeds.
If and when other means of weeds are available, most of the said practices can be got rid of.
One of the main attempts of nava kekelama is to manage weeds with other innovations not requiring more water than for an ordinary highland crop.
Water economy
Though the precipitation, intensity of rainfall and spread over months vary annually, in the long run annual average rainfall remains constant.
Because of this factor, maximum amount of water available for storage with reservoirs and tanks in Sri Lanka has a limit.
There is no purpose of going beyond this storage limit as there would not be water to fill any more tanks and reservoirs.
A good example is the reservoir at Lunugamvehera which hardly fills in any year with the average annual rainfall.
Then further expansion of farming or extent of farming land depends on economizing water or improving water (or irrigation) efficiency.
The simplest and most efficient ways of economizing water are offered by the kekulam method of paddy cultivation.
They are as follows:
1. Land preparation is done either wet condition or dry condition. The fields are not inundated when kekulam method is adopted as the weeds are managed by other cultural practices like mulching.
2. Mulching the crop lowers the evaporation from surface thus increasing the irrigation interval.
3. It has been observed that crops cultivated to kekulam method reach maturity twelve days earlier than conventionally grown crops. Reasons for this phenomenon is not clear but it can be due to non-use of weedicides which retards the growth rate.
4. Sowing pre-germinated and dried seeds can shorten the maturity by another four days. Reaching maturity early is very critical because of water shortages occurring often at the end of the season. 04 and 05 together is a guarantee against crop failure due to water shortage at the end of the season.
5. Kekulam method improves the organic matter content of the soil over time. As organic matter imbibes large quantities of water, the crop can withstand a reasonably long dry period on one hand and increase the irrigation interval on the other.
Practical experience shows that nava kekulam method saves forty to sixty percent of water needed during the two seasons of a year.
This indicates that the acreage under paddy cultivation in Sri Lanka can be doubled when nava kekeulam method is adopted.
Instead of constructing new dams and tanks to increase the extent of land under paddy, popularizing nava kekulam method among farmers will be much more cost effective and also ecologically favourable.
Translation - Tamil நவ கெக்குலம் முறை நெற்பயிர்ச் செய்கை
அஸ்வெதும செய்யப்பட்ட வயல்களிற் செய்யப்படும் உலர் நெற்பயிர்ச் செய்கையானது இலங்கையில் கெக்குலம என்றே அறியப்படுகிறது.
உலர் பயிர்ச் செய்கையானது மாற்று முறைப் பயிரீடாக உயர் நிலங்களிற் செய்யப்படும் போது அது வீ ஹேன எனப்படுகிறது.
முற்காலத்தில், கெக்குலமவுக்காக வயல்களில் ஓரளவு ஆழமான உழுதலுக்காக ஒரு புதிய நாட்டுக் கலப்பையினால் முதலில் உழப்பட்டு, பின்னர் சில நாட்கள் கழித்து விரைவில் மழை வருமென்ற எதிர்பார்ப்புடன் உலர் விதைகள் பயிரிடப்பட்டன.
மீண்டும் விதைகள் பயிரிடப்பட்ட நிலையில், விதைகளை மூடுவதற்காக, பழைய தேய்ந்து போன கலப்பை ஒன்றினால் விவசாயிகள் நிலத்தை உழுதனர்.
வயல்கள் ஈரலிப்பாக இருக்கும் போது, இதே செயன்முறைகள் செய்யப்பட்டனவாயினும், முளை விதைகளே நடப்பட்டன.
சில குளங்களின் கீழே உள்ள சில வயற் பரப்புக்களில், சில பகுதிகள் கெக்குலம முறையில் விதைக்கப்பட்டதுடன், குளங்கள் மழை நீரால் நிரம்பும் போது, அடுத்த பகுதிகள் சாதாராண ஈர நிலப் பண்படுத்தல் முறையில் பயிரிடப்பட்டன. அம்முறையில் உள்ளடங்குவன:
1. முதலாவது உழுதல்
2. வரப்புக்களைத் துப்புரவாக்குதல்
3. வரப்புக்களை மீண்டும் மெழுகுதல்
4. இரண்டாவது உழுதல்
5. சேற்றுழவு
6. மட்டமாக்குதல்
7. வயல்களுக்கு வடிகாலாக ஒடுங்கிய வரப்பு முறையொன்றை ஏற்படுத்துதல்
8. முளை விதைகளை விதைத்தல்
மேற்படி கலாசாரப் பழக்கங்களின் இச்சேர்க்கை பல நூற்றாண்டுகளாக, களைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டிருப்பது தெளிவு.
ஈர நில நெற்பயிர்ச் செய்கையில் தவிர்க்க முடியாததான மண்ணரிப்பினால் மண் வளம் குறைவதனால் களைகளின் தொல்லை ஏற்படு வது தவிர்க்க முடியாதது.
வளம் குறைந்த மண்ணில் வள மட்டம், களைகளுக்கு அமைவான வேறு பௌதிகக் காரணிகள் என்பன காரணமாக நெல்லை விட மிக வேகமாகவே களைகள் வளர்கின்றன.
களைகளுக்கான வேறு வழிமுறைகள் இருந்து, அவை கிடைக்கப் பெறின், மேற்படி நடை முறைகளிற் பெரும்பாலானவற்றிலிருந்து விடுதலை பெறலாம்.
நவ கெக்குலமவின் பிரதான முயற்சிகளுள் ஒன்று சாதாரண உயர் நிலப் பயிரொன்றை விடக் கூடியளவு நீர் தேவைப்படாத ஏனைய கண்டுபிடிப்புக்களின் மூலம் களைகளைக் கட்டுப்படுத்துவதாகும்.
நீரின் சிக்கனம்
மழை பொழிவது பற்றிய முன்னறிவிப்பு, மழை வீழ்ச்சியின் கடுமை, மழை பொழியும் மாதங்கள் என்பன ஆண்டு தோறும் மாறினாலும், காலப் போக்கில் சராசரி ஆண்டு மழை வீழ்ச்சி மாறாததாகவே இருக்கிறது.
இக்காரணத்தால், இலங்கையில் நீர்த் தேக்கங்களிலும் குளங்களிலும் சேமிக்கக்கூடிய ஆகக் கூடிய அளவு நீருக்கு ஒரு வரையறை உண்டு.
இதற்கு மேலும் குளங்களையும் நீர்த்தேக்கங்களையும் நிரப்ப நீர் இருக்காது என்பதனால், இந்த வரையறைக்கு அப்பாற் செல்வதில் எந்த அர்த்தமுமில்லை.
சராசரி ஆண்டு மழை வீழ்ச்சியினால் எந்த ஓர் ஆண்டிலும் நிரம்பாதுள்ள லுணுகம்வெகெர நீர்த் தேக்கம் ஒரு சிறந்த உதாரணமாகும்.
விவசாயத்தை அல்லது விவசாய நிலங்களை மேலும் விரிவு படுத்துவது நீரைச் சிக்கனப் படுத்துவதில் அல்லது நீர் (அல்லது வடிகால்) பயன்பாட்டுத் திறமையை மேம்படுத்துவதில் தங்கியுள்ளது.
நீர் சிக்கனத்தில் ஆக எளியதும் ஆகத் திறமையானதுமான வழிகள் கெக்குலம முறை நெற் பயிர்ச் செய்கையினால் வழங்கப்படுகின்றன.
அவை பின்வருமாறு:
1. நிலத்தைப் பண்படுத்தல் ஈரமான அல்லது உலர் நிலையில் செய்யப்படுகிறது. நிலப் போர்வை போன்ற ஏனைய பண்பாட்டு நடைமுறைகளால் களைகள் கட்டுப்படுத்தப் படுவதனால், கெக்குலம் முறையை மேற்கொள்ளும் போது வயல்கள் நிரம்பி வழிவதில்லை.
3. வழக்கமான முறையில் வளர்க்கப்படும் பயிர்களைவிடப் பனிரண்டு நாட்களுக்கு முன்னரே கெக்குலம் முறையிற் பயிரிடப் பட்ட பயிர்கள் முற்றுவது கவனிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுக்கான காரணங்கள் தெளிவாக இல்லாவிடினும், வளர்ச்சி வீதத்தைப் பாதிக்கும் களை கொல்லிகளைப் பயன்படுத்தாமையாக அது இருக்கலாம்.
4. முன் முளைவிடச் செய்து உலர்த்திய விதைகளைப் பயிரிடுவது முற்றுவதை மேலும் நான்கு நாட்களாற் சுருக்கலாம். பருவத்தின் கடைசியில் அடிக்கடி நீர்ப் பற்றாக்குறை ஏற்படுவதால், முன்னரே முற்றும் நிலையை அடைவது மிக முக்கியமாகும். 04 மற்றும் 05 என்பன இணைந்து பருவத்தின் கடைசியில் நீர்ப் பற்றாக்குறை ஏற்படுவதனாலான விளைச்சல் தவறுதலுக்கு எதிரான ஓர் உத்தரவாதமாகும்.
5. காலப் போக்கில், மண்ணின் சேதனப் பொருள் உள்ளடங்குவதைக் கெக்குலம் முறை மேம்படுத்துகிறது. சேதனப் பொருள் பெருமளவு நீரை உள்ளீர்த்துக் கொள்வதனால், ஒரு பக்கம் பயிர் சாதாரணமாக நீண்ட உலர் பருவத்துக்குத் தாக்குப் பிடிக்க முடிவதுடன், மறு பக்கம் நீர்ப்பாசன இடை வேளையைக் கூட்டுகிறது.
ஓர் ஆண்டின் இரு பருவங்களுக்கும் தேவையான நீரை நாற்பது முதல் அறுபது வீதம் வரை நவ கெக்குலம் முறை சேமிக்கிறது என நடைமுறை அனுபவம் காட்டுகிறது.
நவ கெக்குலம் முறை மேற்கொள்ளப்படின், இலங்கையில் உள்ள நெற்செய்கை நடைபெறும் பரப்பை இரு மடங்காக்கலாம் என்பதை இது சுட்டிக் காட்டுகிறது.
நெற்செய்கை இடம் பெறும் நிலத்தின் அளவை விரிவுபடுத்துவதற்காக, புதிய அணைகளையும் குளங்களையும் கட்டுவதற்குப் பதிலாக விவசாயிகளிடம் நவ கெக்குலம் முறையைப் பிரசித் தப் படுத்துவது மிகவும் செலவுச் சிக்கனமானதும் சூழலியல் அடிப்படையில் விரும்பத்தக்கதும் ஆகும்.
English to Tamil: Diabetes Symptoms in Women General field: Medical Detailed field: Medical (general)
Source text - English Diabetes Symptoms in Women
Diabetes can be mainly classified into two types: type 1 and type 2.
The former is also called juvenile diabetes as it is commonly seen in young children, teenagers and adults usually under the ages of 25-30.
This occurs when the pancreas are unable to produce insulin, which is responsible to carry glucose to our cells.
When enough insulin is not produced, the glucose level in the blood increases.
This increase leads to diabetes.
On the other hand, type 2 diabetes is said to occur in middle-aged and older people who suffer from problems of obesity.
This type of diabetes usually occurs due to a sedentary lifestyle and poor eating habits.
In this case, the pancreas do produce insulin but the body becomes resistant to insulin.
It is not able to use the insulin properly, leading to the presence of glucose in the blood.
Apart from these two, gestational diabetes is the third type of diabetes that occurs in women.
Gestational diabetes, as the name suggests occurs when a woman is pregnant and is a result of hormonal changes.
Though gestational diabetes does not stay after the baby is born, women who have gestational diabetes during the pregnancy are at a higher risk of developing type 2 diabetes later in their life.
Causes of Diabetes in Women
Type 1 diabetes is usually seen in people who have a family history of this disease.
Moreover, people who are suffering from an abnormal immune response are also said to have this form of diabetes.
Even in the case of type 2 diabetes, usually genetics do play a role.
Other than this, it is also very common in people who are obese, who follow an unhealthy diet, and an unhealthy lifestyle.
The chances of diabetes are higher in women of certain races such as African-American, American Indian, Hispanic etc.
Women who suffer from the problem of ovarian cysts or have infertility problems are also at a higher risk of having diabetes later in their lives.
Symptoms of diabetes in Women
Though signs of diabetes in women, and in men are mostly the same, there are a few which occur only in women.
Let us take a look at some of the signs and symptoms of diabetes in women.
Unexplained weight loss is one of the common sign of type 1 diabetes in women.
Our body is unable to use all the calories provided by food we eat, even after following a healthy diet.
Get yourself checked if you are losing quite some weight even after eating properly and not much exercise.
Another symptom that is seen in both types of diabetes is the need to visit the washroom frequently.
The human body tries to get rid of excess sugar through urine and hence, one feels the need to urinate often.
This happens within very short periods of time, and is medically called polyuria.
As excessing urination not only eliminates the extra sugar present in the body, but also large amounts of water, the individual may suffer from the problem of dehydration.
Due to this, she may also experience excessive thirst (medically known as polydipsia) throughout the day which is another symptom of diabetes in women.
One of the typical signs of type 2 diabetes in women is excessive eating, medically known as polyphagia.
When a person has this type of diabetes, the level of insulin is very high in the body.
As insulin aids in stimulating hunger, too much of it may make the person feel unnecessarily hungry, and eventually eat more than required.
Another symptom of diabetes in women is the occurrence of skin infections as well as a vaginal yeast infection, as diabetes is a condition that helps yeast grow easily.
Diabetic women may also experience urinary tract infections very frequently.
Sexual dysfunction is also observed as a common symptom of diabetes in women.
It is said that diabetic women may experience pain or discomfort while indulging in sexual intercourse, reduced vaginal sensitivity and vaginal lubrication, as well as an inability to achieve orgasm.
Apart from these physical symptoms, some psychological symptoms may also be seen in women affected by diabetes.
They may experience extreme lethargy, agitation and may sometimes also feel irritable for no reason.
In case of gestational diabetes, no overt sign may be noticed.
However, if a pregnant woman has high blood pressure, there are chances that she is suffering from gestational diabetes.
Diabetic retinopathy: In this condition, blood vessels in the retina are damaged.
The diabetic retinopathy diseases also include cataract and glaucoma.
In cataract, the lens in our eyes get clouded.
In glaucoma, the fluid pressure in our eyes increases.
This leads to nerve damage.
Patients will notice a slight loss and/or blur in vision.
There are 4 levels of retinopathy: mild, moderate, severe, and proliferative.
Diabetic Nephropathy: Our kidneys are made up of units known as nephrons.
These units are responsible for filtering our blood, and eventually removing wastes from our body.
When a person is affected with diabetes, his nephrons become thicker, and are scarred in time.
They then start to leak, due to which protein is passed in our urine.
The kidney is thus damaged over a period of time.
Symptoms may include nausea, swelling of legs and headaches.
It is also said that diabetes people may suffer from depression.
Though there hasn’t been strong evidence to support this claim, it would suffice to say that people with diabetes are at a higher risk of depression.
If you experience pangs of guilt and nervousness, or change in sleep patterns, loss in appetite, visit your doctor just to be sure you aren’t suffering from diabetes.
This isn’t a sure symptom of the diseases, but why take chances.
These were some of the signs of diabetes in women.
Though most women experience these symptoms, in many cases, people suffering from type 2 diabetes do not experience any symptoms for several years.
Usually, type 2 diabetes is diagnosed after serious health problems like heart attacks, or vision problems arise.
Hence, it is important for every woman to get herself checked for diabetes regularly after the age of 40.
Early detection of these symptoms of diabetes in women will ensure that the individual gets proper treatment to control blood sugar level, thus preventing any major complications connected to this disease.
Translation - Tamil பெண்களில் நீரிழிவு நோயறிகுறிகள்
நீரிழிவை பிரதானமாக 1 ஆம் வகை, 2 ஆம் வகை என இரு வகைகளாக வகுக்கப்படலாம்.
முன்னையது பொதுவாக இளம் சிறுவர்கள், இளைஞர்கள், 25-30 வயதுகளுக்குக் கீழ்ப்பட்ட வயது வந்தோர் ஆகியோரிடையே காணப்படுவதால் இளம்பருவ நீரிழிவு என்றும் அழைக்கப்படுகிறது.
சதையியினால் எமது கலங்களுக்கு குளுக்கோசைக் கொண்டு செல்வதற்குப் பொறுப்பான இன்சுலினைச் சுரக்க முடியாமற் போவதால் இது நிகழ்கிறது.
போதியளவு இன்சுலின் உற்பத்தியாகாத போது குருதியில் குளுக்கோசு மட்டம் கூடுகிறது.
இவ்வதிகரிப்பு நீரிழிவுக்கு வழி கோலுகிறது.
மற்றப் பக்கத்தில், பருமனாதற் பிரச்சினையால் அவதிப்படும் நடுத்தர வயதினரிடையேயும் முதிய வயதினரிடையேயும் 2 ஆம் வகை நீரிழிவு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த வகை நீரிழிவு பொதுவாக ஏற்படுவது மந்தமான வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கங்கள் என்பவற்றினாலாகும்.
இவ்விடயத்தில், சதையியானது இன்சுலினைச் சுரக்கும் போதிலும் உடல் இன்சுலினை எதிர்ப்பதாக ஆகுகிறது.
அதனால் இன்சுலினைச் சரியான முறையிற் பயன்படுத்த முடியாமற் போய், குருதியில் குளுக்கோசு காணப்படச் செய்கிறது.
இவையிரண்டுக்கும் அப்பால், பெண்களில் ஏற்படும் மூன்றாவது வகை நீரிழிவு கர்ப்ப கால நீரிழிவு ஆகும்.
கர்ப்ப கால நீரீழிவு அதன் பெயரினால் வெளிப் படுவது போன்றே ஒரு பெண் கருவுற்றிருக்கும் போது ஓமோன் மாற்றங்களின் விளைவாக ஏற்படுகிறது.
குழந்தை பிறந்த பின்னரும் கர்ப்ப கால நீரிழிவு தங்கியிராவிடினும், கருவுற்றிருக்கும் போது கருக்கால நீரிழிவைக் கொண்ட பெண்கள் தமது வாழ்க்கையில் பிற்காலத்தில் 2 ஆம் வகை நீரிழிவை விருத்தியாக்கும் இடர்ப்பாடு கூடியதாக உள்ளனர்.
பெண்களில் நீரிழிவுக்கான காரணங்கள்
1 ஆம் வகை நீரிழிவு வழமையாக இந்நோய் பற்றிய குடும்ப வரலாறொன்றைக் கொண்டிருப்போரிடமே காணப்படுகிறது.
இதற்கு மேலதிகமாக, அசாதாரண நோயெதிர்ப்புத் துலங்கல் ஒன்றினால் அவதியுறும் ஆட்களும் இவ்வகையான நீரிழிவைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
2 ஆம் வகை நீரிவு விடயத்திலாக இருப்பினும், பொதுவாக மரபியல் பங்கு வகிக்கின்றது.
இது தவிர பருமனாயுள்ள, சுகாதாரமற்ற உணவுப் பழக்கத்தைக் கொண்டுள்ள, சுகாதாரமற்ற வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளோரிடமும் இது மிகப் பொதுவானதாகும்.
ஆபிரிக்க அமெரிக்கர், அமெரிக்க இந்தியர், எசுப்பானியர் போன்ற சில இனங்களின் பெண் களிடம் நீரிழிவு வாய்ப்புக்கள் உயர்வானவையாகும்.
சூலகக் கட்டிகளின் பிரச்சினை அல்லது மலட்டுத் தன்மைப் பிரச்சினைகள் என்பவற்றால் அவதியுறும் பெண்களும் தமது வாழ்வில் பிற்காலத்தில் நீரிவைக் கொண்டிருக்கும் இடப்பாடு அதிகமானதாகும்.
பெண்களில் நீரிழிவு நோயறிகுறிகள்
நீரிழிவின் அறிகுறிகள் பெண்களிலும் ஆண்களிலும் பெரும்பாலும் ஒரே மாதிரியானவையாக இருப்பினும், பெண்களில் மாத்திரமே ஏற்படும் ஒரு சில அறிகுறிகளும் உள்ளன.
பெண்களில் ஏற்படும் நீரிழிவின் அறிகுறிகள், நோயறிகுறிகள் என்பவற்றிற் சிலவற்றைப் பார்ப்போம்.
பெண்களில் 1 ஆம் வகை நீரிழிவின் பொதுவான ஓர் அறிகுறி காரணமில்லாத நிறை இழப்பு ஆகும்.
சுகாதாரமான ஓர் உணவுப் பழக்கத்தைப் பின் பற்றிய பின்னரும், நாம் உண்ணும் உணவின் மூலம் வழங்கப்படும் எல்லாக் கலோரிகளையும் பயன்படுத்துவது எமது உடலால் முடியாதது.
சரியான முறையில் உணவு உட்கொண்டு, அதிகளவு உடற்பயிற்சி இல்லாமல் இருந்தாலும் நீங்கள் ஓரளவு நிறையை இழப்பதாயிருப்பின், உங்களைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
இரு வகை நீரிழிவுகளிலும் காணப்படும் மற்றொரு நோயறிகுறி அடிக்கடி கழிவறைக்குச் செல்ல வேண்டுவதாகும்.
மனித உடல் மேலதிக சீனித் தொந்தரவிலிருந்து விடுபட அதனைச் சிறுநீர் வழியே வெளியேற்ற முனைகிறது.
அதனாலேயே அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தேவையாகிறது.
இது மிகக் குறுகிய கால நேரத்துக்குள் நிகழ்கிறது; மருத்துவ அடிப்படையில் இது சிறுநீர்ப் பெருக்கு எனப்படுகிறது.
கூடிய சிறுநீர் கழித்தல் உடலிற் காணப்படும் மேலதிகச் சீனியை இல்லாதொழிப்பது மாத்திரமன்றி பெருமளவு நீரையும் அகற்றுகிறது.
எனவே அவர் நீரிழிவுப் பிரச்சினையால் அவதியுறலாம்.
இதன் காரணமாக, பெண்களில் நீரிழிவின் மற்றொரு நோயறிகுறியான (மருத்துவ அடிப் படையில் தாகமிகைமை என அறியப்படும்) அளவுக்கு மிஞ்சிய தாகத்தையும் நாள் முழுவதும் அவள் அனுபவிக்கலாம்.
பெண்களில் 2 ஆம் வகை நீரிழிவின் இயல்பான அடையாளங்களுள் ஒன்று மருத்துவ அடிப்படையில் நிறைப்பசி எனப்படும் அளவுக்கு மிஞ்சிய உணவு உட்கொள்ளல் ஆகும்.
இந்த வகை நீரிழிவை ஒருவர் கொண்டிருக்கும் போது, உடலில் இன்சுலின் மட்டம் மிக உயர்வாக இருக்கும்.
பசியைத் தூண்டுவதில் இன்சுலின் பங்களிப்பதால், அது அளவுக்கு அதிகமாக இருப்பது ஒருவரை தேவையில்லாமல் பசி ஏற்படுவதாக உணரச் செய்வதுடன், இறுதியில் தேவைக்கு மேல் உண்ணச் செய்கிறது.
பெண்களில் நீரிழிவின் மற்றொரு நோயறிகுறி தோல் தொற்றுக்களும், அவ்வாறே மதுவம் எளிதாக வளர உதவும் ஒரு நிலைமையாக நீரிழிவு இருப்பதால் யோனி மதுவத் தொற்றும் ஏற்படுவதாகும்.
நீரிழிவு கொண்ட பெண்கள் சிறுநீர் வழித் தொற்றுக்களையும் அடிக்கடி அனுபவிக்கலாம்.
உடலுறவு இயலாமையும் நீரிழிவு கொண்ட பெண்களில் கண்டறியப்பட்ட ஒரு பொதுவான நோயறிகுறி ஆகும்.
உடலுறவில் ஈடுபடும் போது நீரிழிவு கொண்ட பெண்கள் வலி அல்லது அசௌகரியம், யோனித் தொடுகையுணர்ச்சி, யோனி மசகு என்பன குறைதல், அவ்வாறே புணரின்பம் அடைய முடியாமை என்பவற்றை அனுபவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இப்பௌதிக நோயறிகுறிகளுக்கு அப்பால், நீரிழிவாற் பாதிக்கப்பட்ட பெண்களில் உளவியல் நோயறிகுறிகள் சிலவும் காணப்படலாம்.
அவர்கள் கடுமையான சோம்பல், கலக்கம் என்பவற்றையும், சில நேரங்களில் காரணமற்ற சொறியையும் அனுபவிக்கலாம்.
கருக்கால நீரிழிவைப் பொறுத்தவரையில், வெளிப்படையான அடையாளங்கள் கவனிக்கப்படாதிருக்கலாம்.
எனினும், கருவுற்ற பெண் உயர் குருதியழுத்தம் கொண்டிருப்பின், அவள் கர்ப்ப கால நீரிழி வினால் அவதியுறுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
நீரிழிவு வழித்திரை நோய்: இந்நிலைமையில் விழித்திரையில் உள்ள குருதிக் கலன்கள் பாதிக்கப்படுகின்றன.
நீரிழிவு விழித்திரை நோய்கள் கட்புரை, கண்ணழுத்தம் என்பவற்றையும் உள்ளடக்குகின்றன.
கட்புரையின் போது எமது கண்களிலுள்ள வில்லைகள் மறைகின்றன.
கண்ணழுத்தத்தின் போது எமது கண்களிலுள்ள பாய அழுத்தம் கூடுகிறது.
இது நரம்புப் பாதிப்புக்கு வழி கோலுகிறது.
நோயாளர்கள் சிறிதளவு பார்வை இழப்பு அத்துடன்/அல்லது மங்கல் என்பவற்றைக் கவனிக் கலாம்.
எளியது, சாதாரணமானது, கடுமையானது, பெருகுவது என்று விழித்திரை நோயில் நான்கு மட்டங்கள் உள்ளன.
நீரிழிவுச் சிறுநீரக இடர்ப்பாடு: எமது சிறுநீரகங்கள் சிறுநீர்க் கலங்கள் எனப்படும் அலகுகளால் ஆக்கப்பட்டுள்ளன.
இக்கலங்கள் எமது குருதியை வடிகட்டப் பொறுப்பான அதே வேளை, இறுதியில் எமது உடலிலிருந்து கழிவுகளை அகற்றுகின்றன.
ஒருவர் நீரிழிவாற் பாதிக்கப்படும் போது, அவரது சிறுநீர்க் கலங்கள் தடிப்பதுடன், காலப் போக்கில் வடுக்களாகின்றன.
பின்னர் அவை ஒழுகத் தொடங்குவதுடன், அதன் காரணமாக எமது சிறுநீரில் புரதம் கடத்தப்படுகிறது.
எனவே, காலப் போக்கில் சிறுநீரகம் சிதை வுறுகிறது.
இதற்கான நோயறிகுறிகளுள் குமட்டல், கால்கள் வீங்குதல், தலைவலி வகைகள் என்பவற்றை உள்ளடக்கலாம்.
நீரிழிவு கொண்டோர் உளச்சோர்வினாலும் அவதியுறலாம் என்று கூறப்படுகிறது.
இக்கோரிக்கைக்கு ஆதரவளிக்க உறுதியான ஆதாரம் இல்லாவிடினும், நீரிழிவு கொண்டோர் உளச்சோர்வு கொள்வதற்கான கூடிய இடரில் உள்ளனர் எனக் கூறுவது தகும்.
நீங்கள் குற்றவுணர்வு, நடுக்கம் ஆகியவற்றின் மிகையுணர்ச்சிகள் அல்லது உறக்க முறைகளில் மாற்றம், பசி இழத்தல் என்பவற்றை அனுபவித்தால், நீங்கள் நீரிழிவினால் அவதியுறுவதில்லை என்பதை உறுதி செய்வதற்காக, உங்களது மருத்துவரை அணுகுங்கள்.
இது இந்நோய்களின் உறுதியான ஒரு நோயறி குறியல்லாவிடினும், ஏனோ இது நிகழ்கிறது.
பெண்களில் நீரிழிவின் அடையாளங்களிற் சில இவையாகும்.
பெரும்பாலான பெண்கள் இந்நோயறிகுறிகளை அனுபவித்தாலும், பல நேரங்களில், 2 ஆம் வகை நீரிழிவினால் அவதியுறுவோர் எந்தவொரு நோயறிகுறியையும் சில ஆண்டுகளுக்கு அனுபவிப்பதில்லை.
வழமையாக, 2ஆம் வகை நீரிழிவு நோயறியப்படுவது மாரடைப்பு போன்ற மோசமான சுகாதாரப் பிரச்சினைகள் அல்லது பார்வைக் கோளாறுகள் தோன்றும் போதே ஆகும்.
எனவே, 40 வயதுக்குப் பின்னர் ஒவ்வொரு பெண்ணும் நீரிழிவு தொடர்பில் தன்னைப் பரிசோதித்துக் கொள்வது முக்கியமாகும்.
பெண்களில் நீரிழிவின் இந்நோயறிகுறிகளை ஏலவே கண்டு கொள்வது, குருதிச் சீனி மட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக குறித்த ஆள் சரியான சிகிச்சையைப் பெறுவதை உறுதி செய்வதுடன், இந்நோயுடன் இணைந்த எந்தவொரு சிக்கலையும் தடுக்கிறது.
English to Tamil (Translation and Interpretation University of Kelaniya, verified) Tamil to English (Translation and Interpretation University of Kelaniya, verified)
Keywords: Arabic, Chinese, Divehi, English, German, Gujarathi, Hindi, Indonesian, Italian, Malayalam. See more.Arabic, Chinese, Divehi, English, German, Gujarathi, Hindi, Indonesian, Italian, Malayalam, Marathi, Sinhala, Tamil, Urdu, Czech, Korean, Japanese, Polish, Norwegian, Swedish, French, Sinhalese, translation, translator, linguistic works, tamil translation, tamil translator, sinhala translation, sinhala translator, tamil to english, english to tamil, english to sinhala, sinhala to tamil, sinhalese to tamil, english to sinhalese, tamil to sinhala, tamil to sinhalese, sri lankan tamil, sri lankan translator, translation professional, professional translator, professional tamil translator, professional sinhala translator, fast service, language, sociology, international studies, conflict resolution, domestic violence, legal documents, tourism, academic books, leaflets, conference interpreter, sri lanka, ceylon, native, mohammed, fahim, razick, medical, pharmaceutical, social, language, expert, interpreter, quality, Překlad, Vertaling, traduction, Übersetzung, μετάφραση, fordítás, terjemahan, Traduzione, 翻訳, 번역, oversettelse, tłumaczenie, Tradução, перевод, traducción, Översättning, แปล, الترجمة, תרגום. See less.
This profile has received 183 visits in the last month, from a total of 167 visitors